பதுளையில் கம்பியால் தாக்கி ஒருவர் கொலை

பதுளை பொலிஸ் பிரிவில் லிதமுல்ல பிரதேசத்தில் வீடொன்றுக்குள் நுழைந்த குழுவொன்று குறித்த வீட்டு உரிமையாளரை இரும்புக் கம்பியால் தாக்கியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் 65 வயதுடைய பதுளை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் அதே பகுதியைச் சேர்ந்த 21, 24 மற்றும் 31 வயதுகளையுடைய சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்