பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிபொருட்கள் மீட்பு

தும்பலை மேற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிபொருட்கள் மீட்கப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இதன்போது 400 லீற்றர் டீசல் மற்றும் 200 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்