
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் இன்று (புதன்கிழமை)
தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் செயற்பாடுகள் குறித்து
கலந்துரையாடும் நோக்கிலேயே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
இன்று நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலுக்கு தேர்தல்
கண்காணிப்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் 86 பதிவு செய்யப்பட்ட கட்சிகள் உள்ளன என்பதுக்
குறிப்பிடத்தக்கது.