பண்டாரநாயக்க சிலை அருகில் தங்கியிருந்த நால்வர் கைது

நீதிமன்ற உத்தரவை மீறி காலி முகத்திடல் உள்ள பண்டாரநாயக்க சிலை அருகில் தங்கியிருந்த 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

பண்டாரநாயக்க உருவச் சிலையிலிருந்து 10 மீட்டருக்கு உட்பட்ட பகுதிக்குள் தங்கியிருந்தமையால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

காலி முகத்திடலிலுள்ள பண்டாரநாயக்க உருவச் சிலை காணப்படும் பகுதியில் 50 மீட்டர் சுற்றுவட்டத்திற்குள் பிரவேசிக்க தடை விதித்து, கொழும்பு கோட்டை நீதவான் அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.

அதற்கமைய, நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்