
பணவீக்கத்தை மேலும் குறைக்க முடியும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால்
வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்
பௌத்தமகாநாயக்க தேரர்களுடனான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை
எடுக்கப்போவதாக மகாநாயக்கர்களை சந்தித்த பின்னர் அவர் தெரிவித்துள்ளார்.
பணவீக்கத்தை குறைப்பது மத்திய வங்கியின் கடமை மத்திய வங்கி அந்த
விடயத்தில் சிறந்த முன்னேற்றத்தை காண்பித்துள்ளமை குறித்து
திருப்தியடைகின்றேன் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இது கடந்த வருடம் நாங்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார சுமைகளை குறைக்கும்,
வட்டி வீதம் குறையும் மக்களிற்கு நெருக்கடிகள் இன்றி சிறப்பான
வாழ்க்கைக்கான வாய்ப்பு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.