
மினுவங்கொடை முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்காவது சந்தேக நபர்
நேற்றைய தினம் கிரிவுல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொடை – கமன்கெதர பகுதியில் தந்தை மற்றும் அவரின் புதல்வர்கள்
இருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் அவர்கள்
உயிரிழந்திருந்தனர். துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடையவர்கள்
தலைமறைவாகியிருந்த நிலையில், மூவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலை சம்பவம் இரு குடும்பங்களுக்கிடையிலான தனிப்பட்ட பிரச்சினை என
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பட்டம் பறக்கவிடுவது தொடர்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு உருவான பிரச்சினை
இதுவரை நீடிப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே நால்வர் கொலை செய்யப்பட்டுள்ள
நிலையில், நேற்றைய தினம் இடம்பெற்ற முக்கொலையுடன் இதுவரை 7 பேர் கொலை
செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.