படையினரால் வரிய குடும்பத்திற்கு வீடு யாழில் 

தென் பகுதியைச் சேர்ந்த நன்கொடையாளர் குமார வீரசூரியவின் அனுசரணையின் மூலம் ஆவை பிரதேசத்திலுள்ள பெண் ஒருவருக்கும் வள்ளிபுரம் பகுதியில் உள்ள மற்றொரு பெண்ணுக்கும் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை திங்கட்கிழமை 19 ஆம் திகதி திறந்து வைத்த பின்னர், யாழ் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டாரவின் வேண்டுகோளின் பேரில், யாழ் உடுவில் பிரதேசத்திலுள்ள மற்றொரு ஏழைக் குடும்பத்திற்கான வீட்டினை நிர்மாணிக்க நிதியுதவி வழங்கப்பட்டது.

உடுவில் பிரதேசத்திலுள்ள திருமதி டி இந்திரா ரதிஷ் மற்றும் அவருடைய குடும்பத்தாரின் கஷ்ட நிலைமைகள் 51 ஆவது படைப்பிரிவு தலைமையகம் மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு தெரிவிக்கப்பட்டதனையடுத்து யாழ் பாதுகாப்பு படைத் தளபதி குறித்த புதிய வீட்டிற்கான அடிக்கலினை நாட்டினார்,

51 ஆவது படைப்பிரிவின் மேற்பார்வையின் கீழ் 511 பிரிகேட்டின் 9 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையின் தொழில்நுட்ப திறமையானபடையினரைக் கொண்டு நன்கொடையாளரால் நிதியுதவி செய்யப்பட்ட மூலப்பொருட்களுடன் கட்டுமான பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

மத பிரமுகர்கள், 51 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சுமித் பிரேமலால், யாழ் பாதுகாப்பு படை தலைமையக பிரிகேடியர் பொது பதவிநிலை பிரிகேடியர் பிரசன்ன ரணவக்க, 511 ஆவது பிரிகேட் தளபதி ரோஹித்த ரத்நாயக்க, 51 பிரிவின் பதவி நிலை அதிகாரிகள் , 9 வது இலங்கை இலேசாயுத காலாட் படை மேஜர் சிசிர குமார, நலம் விரும்பிகள் மற்றும் படையினர் இவ்வடிக்கல் நாட்டு விழாவில் பங்குபற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்