படத்தின் வெற்றியை வசூலை வைத்து மதிப்பிடக் கூடாது சூர்யா

வசூலை வைத்து ஒரு படத்தின் வெற்றியை மதிப்பிடக் கூடாது என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

சூரரைப் போற்று திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில்,  செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், “ சூரரைப் போற்று கதையின் மீது இயக்குநர் சுதா கொங்கரா மிகவும் ஆர்வமாக இருந்தார். இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்திய நிஜ கதாநாயகனின் கதை அது.

இதன்மூலம் ஒரு நடிகராக எனக்குப் புதிய உலகத்தை அளித்துள்ளார் சுதா கொங்கரா. இன்றைய திரைப்படக் கதைகளுக்கு பிராந்திய எல்லைகள் இருப்பதில்லை. இந்தக் கதை இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைத்தேன்.

வசூலை வைத்து ஒரு படத்தின் வெற்றியை மதிப்பிடக் கூடாது என்று எப்போதும் நான் எண்ணுவேன். படத்தின் உள்ளடக்கமும் அது ஏற்படுத்திய தாக்கமும் தான் மதிப்பிடப்பட வேண்டும். ஒரு படம் எவ்வளவு வசூலைக் குவிக்கிறது என்பதற்குப் பதிலாகப் படத்தால் இரசிகருக்குக் கிடைக்கும் அனுபவமே வெற்றியின் அளவுகோலாக இருக்க வேண்டும். ஓடிடி தளங்கள் அதைச் சாத்தியமாக்கியுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்