பஞ்சாப் அணியிடம்  மண்டியிட்ட ஐதராபாத்  

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 43 ஆவது ஆட்டத்தில் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், டேவிட் வோர்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.

துபாயில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி களத்தடுப்பை தேர்வு செய்ய பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

பஞ்சாப் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக ராகுல் மற்றும் மந்தீப் சிங் களமிறங்கினர்.

சந்தீப் சர்மா வீசிய 5 ஆவது ஓவரில் மந்தீப் சிங் 17 ஓட்டங்களுடன் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய கிறிஸ் கெய்ல் 20 ஓட்டங்களுடன் ஜேசன் ஹோல்டரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து ராஷித் கான் பந்துவீச்சில் கே.எல்.ராகுல் 27 ஓட்டங்களுடன் போல்ட் ஆனார்.

இதற்கிடையில் மெக்ஸ்வெல் (12 ஓட்டங்கள்), தீபக் ஹோடா( டக்கவுட்), கிறிஸ் ஜோர்தன் (7 ஓட்டங்கள்), முருகன் அஸ்வின்(4 ஓட்டங்கள்) ஆகியோரின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்ததால் அணியின் ஓட்ட வேகம் கணிசமாக குறைந்தது.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 126 ஓட்டங்களை எடுத்தது.

நிக்கோலஸ் பூரன் 32 ஓட்டங்களுடனும் ரவி பிஷ்னோய் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதனை தொடர்ந்து 127 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கை நோக்கி ஐதராபாத் அணி துடுப்பெடுத்தாடியது.

அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வோர்னர் மற்றும் பெயர்ஸ்டோ அதிரடியாக விளையாடினர். எனினும் வோர்னர் 35 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய பெயர்ஸ்டோ 19 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அதன்பின் மணீஷ் பாண்டே (15), அப்துல் சமது (7), விஜய் சங்கர் (26), ஹோல்டர் (5), ரஷீத் கான் (0), சந்தீப் சர்மா (0), கார்க் (3) மற்றும் அகமட் (0) ஆகியோர் தொடர்ச்சியாக ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதனால் பஞ்சாப் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து 12 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்