
வடமாகாண சபையின் கலாச்சாரத் திணைக்களமும் பச்சிலைப்பள்ளிப் பிரதேச கலாச்சாரப் பேரவையும் பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் பண்பாட்டு விழா நாளை (29.09.2022) இயக்கச்சியில் உள்ள நோர்த் லங்கா பமிலி ஃபூட் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி ராஜமல்லிகை சிவசுந்தர சர்மா உள்ளிட்டோருடன் பிரதேச கலைஞர்களும் பங்கேற்கின்றனர்.
கலைஞர் விருது வழங்கல், கலை நிகழ்ச்சிகள் என்பனவும் இடம்பெறுகின்றன. நிகழ்வுக்கு பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலர் திரு. ச. கிருஷ்ணேந்திரன் தலைமை தாங்குகிறார்.