பசில் ராஜபக்ஷ இந்தியா வழியாக அமெரிக்கா சென்றதாக சில வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி

பசில் ராஜபக்ஷ இந்தியா வழியாக அமெரிக்கா சென்றதாக சில வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எவ்வாறாயினும், பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க அல்லது மத்தள விமான நிலையத்தின் ஊடாக செல்லவில்லை என எமது விசாரணையின் போது குடிவரவு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கே.ஏ.ஏ.எஸ் கனுகல தெரிவித்தார்.

இதனிடையே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இந்தியா உதவியதாக வெளியான செய்திகள் ஆதாரமற்றவை என இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்