பங்களாதேஷ் வெள்ளத்தில் 62 பேர் பலி!

பருவமழை காரணமாக ஆற்று நீர் பெருக்கெடுப்பினால் பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் நேற்று (18) மாலை உறுதிப்படுத்தியுள்ளது.

ஜூன் 30ம் திகதியிலிருந்து வெள்ளப் பெருக்கு ஆரம்பித்ததிலிருந்து ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகள் 62 ஆக உயர்வடைந்துள்ளது.

51 பேர் வெள்ளத்தில் மூழ்கியும், ஏழு பேர் மின்னல் தாக்கியும், மூன்று பேர் பாம்பு கடியினாலும், ஒருவர் சுத்தமான குடிநீர் இல்லாதமையினால் உண்டான வயிற்றுப் போக்குக் காரணமாகவும் உயிரிழந்துள்ளார்.

முகநூலில் நாம்