பகிடிவதையால் மாணவன் உயிரிழப்பு : சக மாணவருக்கு மரணதண்டனை – நீதிமன்றம் உத்தரவு

1997 இல் பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட மாணவராக இருந்த
செல்வநாயகம் வரபிரகாஷை கொலை செய்த குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண
தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

எவ்வாறாயினும், பிரதான சந்தேகநபரான பாலேந்திரன் பிரசாத் சதீஸ்கரனின்
இருப்பிடம் தெரியாததால், அவரை கைது செய்ய பிடியாணை உத்தரவை பிறப்பித்தும்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட செல்வநாயகம் வரபிரகாஷ் அப்போது முதலாம் ஆண்டு பொறியியல்
மாணவர், என்றும் அவர் மீது மனிதாபிமானமற்ற முறையில் பகிடிவதை
மேற்கொள்ளப்பட்டதால் அவர் மரணித்தார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரேதப் பரிசோதனையின் போது, உடல் உழைப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட தசைக்
காயம் காரணமாக ஏற்பட்ட கடுமையான சிறுநீரகச் செயலிழப்பு மரணத்திற்குக்
காரணம் என நீதித்துறை மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

அவர் அதிக உடல் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டதன் காரணமாக உள் காயங்கள்
ஏற்பட்டதாகவும் இதன் காரணமாகவே குறித்த மாணவன் உயிரிழந்த என்றும் அவர்
மேலும் தெரிவித்தார்.

பகிடிவதை என்ற பெயரில் இதுபோன்ற தீவிர உடற்பயிற்சியை வற்புறுத்தினால்,
இதுபோன்ற கடுமையான காயங்கள் ஏற்படும் என்று யாரும் நம்ப முடியாது என
தீர்ப்பை வழங்கும்போது நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்