நோய் பரவ நாம் காரணமாக இருந்து விட கூடாது.. கொரானா குறித்து கமல் ஹாசன் அதிரடி வீடியோ

கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் பரவி கொண்டு, மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் விஷயம் கொரானா வைரஸ்.

பல நாடுகள் தங்களது மக்களிடையே இந்த கொடிய விஷம் பரவ கூடாது என்று பல விதமாக விழிப்புணர்வுகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் கைபேசி மூலமாகவும் அந்தெந்த அரசு தங்களது நாடுகளுக்கு விழிப்புணர்வுவை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த கொடிய கொரானா வைரஸ் போன்றவை, 100 வருடத்திற்கு ஒருமுறை வரும் என்றும் சில தகவல்கள் வெளிவந்திருந்தது.

இதனை குறித்து பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் திரையுலக சார்ந்த நடிகர் நடிகைகளும் தங்களது பங்களிப்பை இதில் செலுத்தி வந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மையம் தலைவருமான கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதில் கொரானா நோய் பரவ நாம் காரணமாக இருந்து விட கூடாது, அதனை தடுத்து ஒழிப்போம், என்று கூறியுள்ளார்.

இதோ அந்த வீடியோ..

முகநூலில் நாம்