
கொழும்பில் நேற்று இடம்பெற்ற போராட்டங்களின்போது, காயமடைந்தோர் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் நேற்றிரவு பதற்ற நிலை ஏற்பட்டது.
இந்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் தண்ணீர்தாரை பிரயோகங்களை மேற்கொண்டனர்.
இதன்போது, காயமடைந்த இரண்டு பொலிஸார் உட்பட 84 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.