நேற்று குருநகர் புனித ஆரோக்கியநாதர் தேவாலயத்தில் பரபரப்பு

யாழ்ப்பாணம் – குருநகர் புனித ஆரோக்கியநாதர் தேவாலயத்தில் காலை 6.30 மணியளவில் ஞாயிறு ஆராதனை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, தேவாலயத்தை மின்னல் தாக்கியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று காலை யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் மழை வீழ்ச்சி பதிவான நிலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

இதனால், தேவாலயத்தில் மேற்கூரைப் பகுதிகளும், மின் இணைப்புக்களும் சிறிது சேதமடைந்தன. எனினும், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்