நெற்களமாகிய வீதியில் விபத்து மரணம்

கிளிநொச்சி – பரந்தன் முல்லைத்தீவு வீதியில் கண்டாவளை சந்திக்கருகில் இன்று பிற்பகல் ஏற்பட்ட பாரவூர்தி – துவிச் சக்கர வண்டி விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.

வீதியில் நெல் உலர விடப்படும் நிலையில் புளியம்பொக்கணையில் இருந்து கண்டாவளை நோக்கி பயணித்த முதியவர் மீது பரந்தன் பகுதியில் இருந்து    புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த பாரஊர்தி மோதியுள்ளது.

இவ்விபத்தில் வட்டகச்சி பகுதியைச் சேர்ந்த கதிரவேலு யாதவராசா என்ற 58 வயதுடைய 6 பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். 

குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலீஸார் மேலதிகவிசாரனைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கடந்து சில வாரங்களுக்கு முன்னர் பரந்தன் பூநகரி வீதியிலும் நெல் உலரவிட்டதன் காரணமாக ஏற்பட்ட விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலியாகியிருந்தாார்.

அத்தோடு மேலும் சிலர் விபத்தினால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்