நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது தூக்கம் வந்தால் தூங்க முடியுமா?

இலங்கையிலுள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது, வாகனத்தைச் செலுத்தும் சாரதிக்கு நித்திரைக் கலக்கம் வந்தால், வாகனத்தை ஓரங்கட்டிவிட்டு, சற்றுநேரம் ஓய்வெடுக்க முடியுமா? என்ற விவகாரம், தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் அறிக்கையொன்ற வெளியிட்டுள்ள நெடுஞ்சாலைப் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு முகாமைத்துவப் பிரிவு, இவ்வாறான நித்திரைக் கலக்கம் ஏற்படும் போது, நெடுஞ்சாலை ஓரத்தில், பாதுகாப்பற்ற முறையில் வாகனத்தை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்க முடியாதெனத் தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும், அடுத்துவரும் இடம்மாறலிலிருந்து வெளியேறி, தேவையான ஓய்வைப் பாதுகாப்பான முறையில் எடுத்த பின்னர், ​மீண்டும் நெடுஞ்சாலையில் பயணிக்க முடியுமென்றும், குறித்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

இருப்பினும், முடிந்தளவுக்கு வெலிபென்ன சேவை நிலையத்துக்கு (44km) சென்று ஓய்வெடுப்படு நல்லதெனத் தெரிவித்துள்ள அப்பிரிவு, அதுவரை தாக்குப்பிடிக்க முடியாவிட்டால், மேற்கண்ட நடைமுறையைப் பின்பற்றுமாறும், முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தயுள்ளது.

முகநூலில் நாம்