நெசவு உடை மற்றும் பத்திக் புடவை இறக்குமதியை நிறுத்த தீர்மானம்

நெசவு ஆடை மற்றும் பத்திக் புடவை இறக்குமதியை நிறுத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

ஆடைத் தொழிற்துறையினர் நேற்று (15) மாலை ஜனாதிபதியை சந்தித்த போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கு பதிலாக உள்நாட்டு ஆடை உற்பத்திக்கு அதிக சந்தை வாய்ப்பை வழங்குவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

பாடசாலை சீருடை, ஏனைய உத்தியோகபூர்வ சீருடைகளுக்கான துணி உற்பத்தியின் தரம் சிறந்த நிலையில் பேணப்பட வேண்டும் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியதுடன், அதற்காக குழுவொன்றை ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தகர்கள் இணைந்து தீர்மானமொன்றை மேற்கொள்வதன் மூலம், பரந்த சந்தை வாய்ப்பைப் பெற முடியும் எனவும் ஏனைய நாடுகளின் கொள்வனவாளர்கள் ஆடைகளை தொகையாகக் கொள்வனவு செய்வதற்கு வர்த்தக மத்திய நிலையமொன்றை ஸ்தாபிக்க வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

வௌிநாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் நூல் மற்றும் இரசாயன நிறங்களின் தரம் மற்றும் விலை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்