நுவரெலியா – மீபிலிமான வீதியில் மண்சரிவு போக்குவரத்து பாதிப்பு

நுவரெலியா – மீலிமான பிரதான வீதியின் ரூவான்எலிய பகுதியில் இன்று மண்சரிவு ஏற்பட்டதில் இவ்வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது

மண்சரிவு காரணமாக நுவரெலியா, மீபிலிமான மற்றும் அம்பேவலைக்கான போக்குவரத்து முற்றாக பாதிப்பு ஏற்பட்டிருந்தது

பின்னர்  பொலிஸார் , நுவரெலியா வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மண்மேட்டினை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் மேலும்  மண்சரிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால், வாகன சாரதிகள்  மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்