நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு!

அம்பன் சூறாவளி காரணமாக மத்திய மலைநாட்டில் பல்வேறு பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக நீர் மின் உற்பத்தி நிலையங்களின் நீர்த்தேங்கங்களுக்க நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், குறித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது

அத்துடன், கடந்த சில நாட்களாக நிலவிய வரட்சியான காலநிலையால் நீர் மின் உற்பத்தி நூற்றுக்கு 15 – 20 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்திருந்தது.

நீர்த் தேங்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்தமையே இதற்கு காரணமாகும்.

எனினும், நேற்றைய தினமாகும்போது, நீர் மின் உற்பத்தி நூற்றுக்கு 31 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

முகநூலில் நாம்