
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையானது நீர் இணைப்பை பெற்றுள்ள
தனது வாடிக்கையாளர்களுக்கு மாதம் தோறும் அச்சிடப்பட்ட பெரியளவிலான
தாள்களில் வழங்கி வந்த மாதாந்த நீர்க் கட்டணப்பட்டியல் விரைவில்
அச்சிடப்பட்ட இயந்திர பிரதியாக நீர் இணைப்பை பெற்றுள்ள
வாடிக்கையாளர்களுக்கு அந்தந்த இடங்களில் வைத்தே வழங்கப்படும் எனவும் இது
உத்தியோகபூர்வ கட்டணப்பட்டியல் எனவும் தேசிய நீர் வழங்கல்
வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
சூழலுக்கு நட்பாக இருத்தல், மற்றும் வாடிக்கையாளர்கள் இலகுவாக
கையாள்வது, செலவுகளை கட்டுப்படுத்தல், போன்ற காரணங்களை கருத்தில் இம்
முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
Mobile Point of Sale Machine இயந்திரம் ( ஆதாவது பேரூந்துகளில்
நடத்துனர் பயன்படுத்துகின்ற சிட்டை வழங்கும் இயந்திரம் மாதிரி) மூலம்
நீர் இணைப்புள்ள அந்தந்த இடங்களிலேயே மாதாந்த நீர்க்கட்டணப் பட்டியல்
வழங்கப்படும். இதற்கு மேலதிகமாக முழுமையான பட்டியலை பெற விரும்புகின்ற
வாடிக்கையாளர்கள் மின்னஞ்சல் மூலம் ஈ பட்டியலை ( E-Bill) பெற்றுக்கொள்ள
முடியும் அத்தோடு குறுந் தகவல் மூலமும் கட்டண விபரங்கள் அனுப்பபடும்
இதற்கான பரீட்ச்சார்த்த நிகழ்வு நாடாளவிய ரீதியில் முதன் முதலாக வடக்கு
மாகாணத்தில் கடந்த வாரம் தேசிய நீர் வழங்கல்
வடிகாலமைப்புச் சபையின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் இடம்பெற்றது.
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்டங்களிலும் நீர்மானி
வாசிப்பாளர் மற்றும் அதிகாரிகளுக்கு ஒரு நாள் பயிற்சி
அளிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த மாதாந்த நீர் கட்டணப்பட்டியல் தொடர்பில்
வங்கிகள், தபால் நிலையம், நிதி நிறுவனங்கள், மற்றும் கட்டணம் செலுத்தக்
கூடிய முகவர்கள் ஆகியோருக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை
உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.