நீருக்கு அடியில் தலை­கீ­ழாக நடக்கும் யுவதி

நீச்சல் தடா­கத்தில் யுவ­தி­யொ­ருவர் தலை­கீ­ழாக நடந்து சாக­சத்தில் ஈடு­படும் வீடியோ இணை­யத்தில் வைர­லா­கி­யுள்­ளது.

தடா­கத்தில் நீர்­மட்­டத்­துக்கு கீழே இந்த யுவதி தலை­கீ­ழாக ‘நடந்து’ சென்று, திடீ­ரென 360 பாகை சுழன்று, தடா­கத்தின் அடியில் வைக்­கப்­பட்­டி­ருக்கும் கைப்பை ஒன்றை தனது தோளில் மாட்­டிக்­கொண்டு கொண்டு செல்லும் காட்சி இவ்­வீ­டி­யோவில் உள்­ளது. 

கிறிஸ்­டினா மகு­சென்கோ எனும் 27 வய­தான இந்த யுவதி, அமெ­ரிக்­காவின் புளோ­ரி­டமா மாநி­லத்தை தள­மாகக் கொண்­டவர். எனினும், இவர் ரஷ்ய பிரஜை ஆவார்.

இசை­யொ­ருங்கு நீச்சல் வீராங்­க­னை­யான மகு­சென்கோ, ரஷ்­யாவின் சார்பில் சர்­வ­தேச இசை­யொ­ருங்கு நீச்சல் போட்­டி­களில் பங்­கு­பற்­றி­யவர். 

2011 ஆம் ஆண்டு கனிஷ்ட ஐரோப்­பிய சம்­பி­யன்ஷிப் போட்­டி­களில் இரு தங்கப் பதக்­கங்­க­ளையும் கிறிஸ்­டினா மகு­சென்கோ வென்­றி­ருந்தார்.

நீருக்கு அடியில் நட­ன­மா­டு­வது மகு­சென்­கோ­வுக்கு சாதா­ர­ண­மான விடயம். 

இந்­நி­லையில், சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் அடிக்­கடி தனது சாகச வீடி­யோக்­களை அவர் வெளி­யிட்டு வரு­கிறார். மில்­லியன் கணக்­கான தட­வைகள் அவ்­வீ­டி­யோக்கள் பார்­வை­யி­டப்­ப­டு­கின்­றன.

டிக்­டொக்கில் மில்­லியன் கணக்­கானோர் அவரை பின் தொடர்­கின்­றனர்.

மகு­சென்­கோவை இன்ஸ்­டா­கி­ராமில் 68 லட்சம் பேர் பின்­தொ­டர்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்