
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.இந்தியா- நியூசிலாந்துக்கு இடையேயான 3 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் ஹைதராபாத்தில் இன்று (17) நடக்கிறது.
இந்த நிலையில் காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இந்திய அணியின் ஷ்ரேயாஸ் அய்யர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக அணியில் ரஜத் படிதார் சேர்க்கப்ட்டுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.