நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

நியமனக்கடிதங்கள் பெற்ற பட்டதாரிகள் 7 நாட்களுக்குள் பயிற்சிக்கு சமூகமளிக்காவிட்டால், குறித்த நியமனம் இரத்துச் செய்யப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.

அத்துடன் அதன் பின்னர் மேற்கொள்ளப்படும் கோரிக்கைகள் எதுவும் எக்காரணங்களைக் கொண்டும் அங்கீகரிக்கப்படமாட்டாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் திட்டத்திற்கு அமைய, பயிலுனர் பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, மூன்று நாட்களுக்குள் உரிய பிரதேச செயலகத்தில் தாம் நியமனத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவிக்குமாறு, குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஆளடையாள அட்டை, பிறப்பத்தாட்சிப் பத்திரம், வதிவிடத்தை உறுதிப்படுத்தும் கிராம சேவகரின் அத்தாட்சி, பட்ட சான்றிதழ் அல்லது உரிய பல்கலைக்கழகத்தினால் பெறுபேறுகள் உறுதிப்படுத்தப்பட்ட அத்தாட்சிக் கடிதம் அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அல்லது கல்வியமைச்சின் கடிதம் மற்றும் பெயரில் ஏதாவது மாற்றங்கள் காணப்படுமாயின் அது தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்