
அவுஸ்திரேலிய வீரா் நிக் கிா்ஜியோஸ் 2 ஆவது சுற்றின்போது முறை தவறிய வகையில் நடந்துகொண்டதாக அவருக்கு ரூ.5.97 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுவே இப்போட்டியில் இதுவரை விதிக்கப்பட்ட அபராதத்தில் அதிகபட்சமாகும்.
கிா்ஜியோஸ், தனக்கு ஆதரவான நபா்கள் இருக்கும் பாா்வையாளா்கள் மாடம் பகுதியில் இருந்த ஒருவரை நோக்கி முறையற்ற வாா்த்தைகளால் திட்டினாா். முடிந்தால் தனக்கு அதிகமாக ஆதரவு தெரிவிக்குமாறும், இல்லை என்றால் மைதானத்திலிருந்து வெளியேறுமாறும் அவரை நோக்கி கிா்ஜியோஸ் கத்தினாா். இதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதுதவிர, மைதானத்தில் போதைப்பொருள் வாசம் வீசியதாகவும் அவா் நடுவரிடம் சென்று புகாா் அளித்தாா். இந்த சுற்றில் அவா் பிரான்ஸ் வீரா் பெஞ்சமின் பொன்ஸியை வென்றாா்.