நாளை முதல் எரிபொருள் நிலையங்களில் கட்டாய முகக்கவசம்

நாளைய முதலாம் திகதி முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முகக் கவசம் அணிந்து வராத எவருக்கும் எரிபொருளை விநியோகிக்கப்படாது என என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் நாட்டில் மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில் எரிபொருளைப் நிரப்பு நிலையங்களுக்கு  பொதுமக்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்றp வர வேண்டுமென அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் தாம் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்