
கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்திற்குட்பட்ட ஆறு முன்பள்ளி சிறார்களுக்கு பசுப்பால் வழங்கும் திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வைகயில் நேற்றைய தினம் புதிதாக கல்மடுநகர் ரங்கன் முன்பள்ளி சிறார்களுக்கும் பசுப்பால் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சமத்துவக் சட்சியின் செயற்றிட்டங்களில் ஒன்றாக மேற்கொள்ளப்பட்டு வரும் தூயபசுப்பால் வழங்கும் திட்டத்திற்கு அக் கட்சியின் தர்மபுரம் பிரதேச அமைப்பாளர் நா. சந்திரகுமார் நிதியுதவியினை மேற்கொண்டு வருகின்றார்.
அந்த வகையில் அவரின் நிதியுதவியின் கீழ் தர்மபுரம் கிராமத்தில் புதிய உதயம் முன்பள்ளி, வளர்மதி முன்பள்ளி, இராசநாயகம் முன்பள்ளி, மயில்வாகனம்புரம் மயூரன் முன்பள்ளி, பெரியகுளம் விக்னேஸ்வரா முன்பள்ளி, கல்மடு ரங்கன்முன்பள்ளி ஆகிய ஆறு முன்பள்ளிகளில் நூற்றுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு நாளாந்தம் பசுப்பால் வழங்கப்பட்டு வருகிறது.



