நாயகனாகப்போகும் விஜய்யின் மகன் சஞ்சய்- உறுதி செய்த பிரபலம்

தமிழ் சினிமாவின் இளைய தளபதி எப்போதுமே விஜய் தான். வயதாக வயதாக விஜய் இன்னும் இளமையாகவே காணப்பட்டு வருகிறார்.

இவரது மகன் சஞ்சய் இப்போது சினிமாவில் ஜொலிக்க இருக்கிறாராம்.

மதுரையில் உள்ள விஜய் நற்பணி மன்றத்தில் தலைவர் மகேஷ் வீட்டிற்கு அண்மையில் விஜய்யின் அம்மா-அப்பா சென்றிருந்தனர்.

அவரது குடும்பத்தினருக்காக அவர்களே சமைத்து கொடுத்தனர், அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. ஒரு பேட்டியில் மகேஷ் பேசும்போது, விஜய்யின் மகன் சஞ்சய் இந்த வருட இறுதியில் கனடாவில் தனது படிப்பை முடிக்கிறார்.

அடுத்த வருடமே சினிமாவில் அவர் மாஸ் எண்ட்ரீ கொடுக்க வாய்ப்பு உள்ளது என அவர் உறுதியாக கூறியுள்ளார்.

முகநூலில் நாம்