நான் ராஜபஷக்களின் நண்பன் அல்ல மக்களின் நண்பன்-ஜனாதிபதி ரணில்

ஜனபதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (20) மாலை கொழும்பு ஹீணுப்பிட்டிய கங்காராம விகாரைக்கு விஜயம் செய்தார்
இந்தபயணம் தனிப்பட்ட விஜயமாக திட்டமிடப்பட்டிருந்த போதிலும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்நத ஊடகவியலாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்தநாட்டு மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றும் பழைய ராஜபஷ ஆதரவாளரான நீங்கள் எப்படி அந்த மாற்றத்தை ஏற்படுத்து வீர்கள் என்றும் ஜனாதிபதியிடம் ஊடகவியலாளர் கேள்வி கேட்டார்.
நான் எப்படி ராஜபஷக்களின் நண்பனாக இருக்க முடியும்? எனக்கு தெரிந்த காலத்திலிருந்தே அவர்களுக்கு எதிரானவர். இன்று வெளிநாட்டில் இருந்து வந்து ராஜபஷ ஆதரவாளரா என்று கேட்கிறீர்கள்
இங்கு யாரிடம் கோட்டாலும் அவர்கள் ராஜபஷவின் நண்பர்களாக இருப்பார்.

இலங்கை எதிர்பார்க்கும் மாற்றத்தை எவ்வாறு ஏற்படுத்துவது?இலங்கை மக்கள் எதிர்பாக்கும் மாற்றத்தை ஏற்படுத்த நான் தயாராக உள்ளோன்.
நான் உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகின்றேன். ஒரு பத்திரிகையாளராக நீங்கள் ஆழ்ந்த தேடலில் ஈடுபட வேண்டும் இது போன்ற கேள்விகளை கேட்காதீர்கள்

நீங்கள் ராஜபஷக்களின் நண்பன் இல்லையா? நான் ராஜபஷக்களின் நண்பன் இல்லை மக்களின் நண்பன். இன்னொன்றையும் கூறுகின்றேன். ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுடன் இணைந்து நான் இதற்கு முன்னர் பணியாற்றியுள்ளேன். நான் அவருக்கும் வாக்களித்ததில்லை. ஆவள் ஒருகட்சி நான் இன்னொரு கட்சி நான் ராஜபஷக்களுடன் இணைந்து செயற்படுகிறேன் என்று கூறுவது நான் அவர்களுடைய நண்பன் என்று அர்த்தமல்ல எனக்கு கிடைக்கும் வாய்ப்புக்கள் மற்றும் எனதுகட்சியை பலப்படுத்துவதற்கான வாய்ப்புக்களை மட்டுமே பார்க்கிறேன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்