“நான் நடிக்க ஆரம்பிப்பதற்கு முக்கிய காரணமே விஜய் தான்” – கௌதம் மேனன் அதிரடி பேச்சு

இயக்குனர் கௌதம் மேனன் தமிழில் மின்னலே திரைப்படத்தின் மூலம் இயக்குனாராக அறிமுகானார். அதன்பின் அவர் இயக்கிய அனைத்து படங்களுமே அவருக்கேன ஒரு தணி ஸ்டைலில் ஒருவாகியிருப்பார்.

கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இயக்கிய படங்களை ரசித்து வந்த ரசிகர்கள், தற்போது இவர் நடிக்கும் படங்களையும் ரசித்து வருகின்றனர்.

அண்மையில் இவர் நடித்த திரைப்படங்களான ஒ மை கடவுளே மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்கள் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட கௌதம் மேனன், அவர் திரைப்படங்களில் நடிக்க வந்தது குறித்து பேசியுள்ளார்.

இது குறித்து கூறுகையில் “நான் நடிகரானதற்கு முக்கிய கராணம் இயக்குனர் விஜய் மில்டன் தான், அவர் கொடுத்த தைரியத்தினால் தான், நான் படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். இப்போது பலரும் என்னை நடிக்க அழைக்கிறார்கள்” என அதிரடியாக கூறியுள்ளார்.

முகநூலில் நாம்