நான்கு மில்லியனுக்கும் அதிகமானோர் மருந்து, மருத்துவ உபகரண பற்றாக்குறையால் பாதிப்பு

நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள மருந்துப்
பற்றாக்குறையினால் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் (ACMOA)
தெரிவித்துள்ளது.

ACMOA அறிக்கையின் படி,கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்கள் தொற்றாத
நோய்களுக்கு (NCDs) சிகிச்சை பெறுகின்றனர், ஒரு மில்லியன் மக்கள்
தடுக்கக்கூடிய குருட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர், பத்தாயிரம்
நோயாளிகள் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய நிலுவையில் உள்ளனர், மேலும்
பத்தாயிரம் புற்றுநோயாளிகள் தற்போது தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் நிலவும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின்
பற்றாக்குறையால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கம்
தெரிவித்துள்ளது.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரோல் மற்றும் இதய நோய்கள் போன்ற
NCD களுக்கு நாளாந்தம் சுமார் 3 மில்லியன் மக்கள் மருந்து உட்கொள்வதாக
ACMOA இன் செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார, தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்