நாட்டில் 2704 பேருக்கு கொரோனா தொற்று!

COVID – 19 தொற்றுக்குள்ளான 7 பேர் நேற்றைய தினம் (18) அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, நாட்டில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,704 ஆக அதிகரித்துள்ளது.

  • பிலிப்பைன்சில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒருவர்
  • கந்தக்காடு முகாமைச் சேர்ந்தவர்களுடன் தொடர்புகளைப் பேணிய ஹோமாகவைச் சேர்ந்த நால்வர்
  • லங்காபுரவைச் சேர்ந்த ஒருவர்
  • சேனபுர புனர்வாழ்வு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட கைதி ஒருவர் ஆகியோரே நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களாவர்.

COVID – 19 தொற்றுக்குள்ளான 11 பேர் நேற்று குணமடைந்ததுடன், குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,023 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, கந்தக்காட்டில் தொற்றுக்குள்ளானவர்களை அடையாளம் காண்பதற்காக இதுவரை 6,000 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்