நாட்டில் 1905 பேருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் Covid – 19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,905 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 16 பேர் நேற்று (15) அடையாளம் காணப்பட்டனர்.

மாலைதீவிலிருந்து நாடு திரும்பிய 6 பேர், குவைத்திலிருந்து வந்து திருகோணமலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஐவர் மற்றும் முல்லைத்தீவு , இயக்கச்சி தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 3 கடற்படையினர் ஆகியோர் இதில் அடங்குகின்றனர்.

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 16 பேர் அடையாளம் காணப்பட்டதுடன் , 55 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நாட்டில் 11 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

முகநூலில் நாம்