நாட்டின் பல இடங்களில் கனமழை பெய்யக்கூடும் !

மேல், தென், சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில் இன்று (31) 150 மில்லிமீற்றர் வரை கன மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளில் 100 மில்லி மீற்றர் அளவான மழை பெய்யுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடிய சாத்தியம் காணப்படுகிறது எனவும் அத;் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பலத்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ள போதிலும் ஆறுகளில் வௌ்ளம் ஏற்படும் அபாயம் இல்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, மாத்தளை மாவட்டத்தின் அம்பன்கங்ககொர மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம ஆகிய பகுதிகளுக்கு முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்