
நாட்டின் பல இடங்களில் இன்று பிற்பகலில் மழை பெய்யும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. சப்ரகமுவ, மத்திய, மேல்மாகாணங்கள் காலி, மாத்தறை மாவட்டங்களுக்கு இந்த எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்த வேளைகளில் மின்னல் தாக்கங்களில் இருந்து தம்மை காத்துக்கொள்ள பொதுமக்கள் முன்நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை மையம் கோரியுள்ளது. இதேவேளை கடற்பிரதேசத்தில் கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை பகுதியில் இன்று இரவு மழை பெய்யும்.
வடக்கில் காற்று 20-30 கிலோமீற்றர் வேகத்தில் வீசும். காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதியும் புத்தளத்தில் இருந்து மன்னார் வரையிலான கடற்பகுதியும் காற்று வீசும் பொது கொந்தளிப்பாக இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.