நாட்டின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் – பேராதனிய பல்கலைக்கழக பொருளாதார விஞ்ஞான பிரிவு பேராசிரியர் வசன்த அத்துகோரள

அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள 2.5 சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி
காரணமாக பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் மேலும்  அதிகரிக்கலாம்.

இந்த வரி மூலம் மக்களின் வரி சுமை நூற்றுக்கு 6 முதல் 10 வீதம் வரை
அதிகரிக்கும் என பேராதனிய பல்கலைக்கழகபொருளாதார விஞ்ஞான பிரிவு
பேராசிரியர் வசன்த அதுகோரள தெரிவித்தார்.

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்காக கடந்த வரவு செலவு
திட்டத்தின்போது பிரேரிக்கப்பட்டிருந்த 2.5 சமூக பாதுகாப்பு பங்களிப்பு
வரி ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வருந்துள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி 2022 வரவு செலவு திட்டம் ஊடாக
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தி இருந்தது. அரசாங்கத்தின் வருமானத்தை
அதிகரித்துக்கொள்வது மற்றும் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள
நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்திலேயே இந்த வரி
விதிக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது.

வருடாந்த வருமானம் 120மில்லியன் ரூபா பெறும் நிறுவனங்கள் பல்வேறு
வகைகளில் இதில் உள்வாங்கப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் இறக்குமதியாளர்கள்,
உற்பத்தியாளர்கள், மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் என பல நிறுவனங்கள்
இதில் உள்வாங்கி இருக்கின்றன.

இதன் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணம் பாரியளவிர்
அதிகரிக்கலாம் என எமக்கு எதிர்பார்க்க முடியும் எனவும் அவர்
தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்