
நாட்டின் நீண்டகால அபிவிருத்தி பிரபலமான தீர்மானங்களில் அன்றி சரியானதீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் தற்போது 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைசமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.21ஆம் நூற்றாண்டின் நவீன உலகிற்கு ஏற்ற புதிய பொருளாதாரத்தைகட்டியெழுப்பும் பணி, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமுன்மொழிவுகளின் ஊடாக ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இளைஞர்களின் சிறந்த எதிர்காலத்திற்காக, ஆர்ப்பாட்டங்கள் ,போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் போன்ற பாரம்பரிய அரசியல் முறைகளுக்குஅப்பாற்பட்ட புதிய வேலைத்திட்டங்கள், புதிய அணுகுமுறையின் மூலம் ,இளைஞர்களின் எதிர்காலத்திற்கு உகந்த புதிய பொருளாதாரத்தை உருவாக்குவோம்என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது 420 அரச நிறுவனங்களை அரசாங்கம் கட்டுப்பாட்டில்வைத்திருப்பதாகவும் அந்த 486 நிறுவனங்களில் 52 நிறுவனங்களுக்குவருடாந்தம் 86 பில்லியன் நட்டம் ஏற்படுவதாகவும் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வ வாரியங்களின் பட்டியலைஅடுத்த சில நாட்களில் நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதாகவும் இவ்வளவு பெரியஇழப்புகளைச் சுமந்து கொண்டு அந்த நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வவாரியங்களை அரசு செலவில் பராமரிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்களை உடனடியாக தடுப்பதற்கு அரசாங்கம் என்றரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.