நாட்டிடை பலவீனப்படுத்தும் ஜனாதிபதி – ரஞ்சித் மத்தும பண்டார

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தில் தனக்கு நெருக்கமானவரை மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்து முழு அரசாங்கத்தையும் பலவீனப்படுத்தினார்.

மக்களால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை பதவி நீக்கி, தமக்கு நெருக்கமானவரை ஆளுநராக நியமிக்கும் முயற்சியை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் வெள்ளிக்கிழமை (2) இடம்பெற்ற இடைக்கால வரவு – செலவு திட்டத்தின் மீதான மூன்றாவது நாள் விவாதத்தின் போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வரலாற்றில் துயரமான நிலையினை நாடு எதிர்கொண்டுள்ளது. மூன்று வேளை உணவு உட்கொண்ட மக்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தினால் தற்போது இருவேளை உணவை உட்கொள்கிறார்கள். 22 இலட்ச பிள்ளைகள் மந்த போசனை குறைப்பாட்டிள்ளு ஆளாகியுள்ளார்கள். வாழ்க்கை செலவுகள்  நாளாந்தம் உயர்வடைந்த நிலையில் உள்ளன.

வாழ்க்கை செலவு அதிகரிப்பிற்கு மத்தியில் மின்சாரம், நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளன. நிவாரனம் வழங்க வேண்டிய தரப்பினருக்கு இடைக்கால வரவு செலவு திட்டத்தில் உரிய நிவாரனம் வழங்க எவ்வித முன்மொழிவுகளும் உள்வாங்கப்படவில்லை. அரசியல் நோக்கத்திற்காக சமுர்த்தி கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பொறுப்புக் கூற வேண்டும்.இலாபமடைந்த அரச நிறுவனங்களை அரசியல் நோக்கத்திற்காக பொதுஜன பெரமுனவின் தலைவர்களே நட்டமடைய செய்தார்கள் என்பதை மறுக்க முடியாது.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் மத்திய வங்கியின் ஆளுநர் மீது போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

நல்லாட்சி அரசாங்கத்தில் தனக்கு நெருக்கமானவரை மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்ததால் தான் நல்லாட்சி அரசாங்கம் முழுமையாக பலவீனமடைந்தது. தற்போது மீண்டும் அதன் தொடர்ச்சியை முன்னெடுக்க ஜனாதிபதி முயற்சிக்கிறார்.

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பொருளாதார மீட்;சிக்காக சிறந்த தீர்மானங்களை முன்னெடுத்துள்ள நிலையில் ஜனாதிபதி மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக செயற்படுகிறார்.

தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் நாடு மோசமான நெருக்கடியை அடைந்துள்ளது. ஊழல் வாதிகள் தமக்கு தேவையான ஜனாதிபதியை தெரிவு செய்துக்கொண்டார்கள்.

தம்மை தெரிவு செய்த தரப்பினருக்கு ஏற்றாட் போல் ஜனாதிபதி செயற்படுகிறார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்ற போது காலி முகத்திடல் போராட்டம் தொடர்ந்து முன்னெடுத்து செல்லப்பட வேண்டும் என குறிப்பிட்டார். 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினார்,இவர் ஜனாதிபதியாகினார். தம்மை தெரிவு செய்த தரப்பினருக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற தற்போது போராட்டகாரர்கள் மீது அடக்குமுறையினை பிரயோகிக்கிறார்.

ஆயுதமேந்திய பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த இயற்றப்பட்ட பயங்கரவாததடைச்சட்டம் அரசாங்கத்தின் வங்குரோத்து நிலையினை ஜனநாயக முறையில் சுட்டிக்காட்டும் மாணவர்கள் மீது பயன்படுத்தப்படுகிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான கைதுகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

முட்டாள் தனமான உர கொள்கையினால் நாட்டின் விவசாயத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த அநியாயம் தொடர்பில் ஆராய பாராளுமன்ற தெரிவு குழு நியமிக்கப்பட வேண்டும். ஊழல் மோசடியினால் தான் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்