நாடு முழுவதும் முதலாம் தரத்திற்கு மாணவர்கள் இன்று அனுமதி

2020 ஆம் ஆண்டில் முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு இன்று நாடுபூராவும் நடைபெறுகிறது. இதன் பிரதான நிகழ்வு கல்வி அமைச்சர் டலஸ் அலஹபெருமவின் தலைமையில்    மாத்தளை வில்கமுவ நுககொல்ல தர்மப்பிரதீபா ஆரம்பப் பாடசாலையில் நடைபெறும்.

இதனையொட்டி யதாக நாடுபூராகவுமுள்ள பாடசாலைகளில் முதலாம் மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் தர மாணவர்களினால் முதலாம் வகுப்பு மாணவர்கள் மலர்செண்டு வழங்கி ஊர்வலமாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்