நாடு திரும்பிய வெளிநாட்டு கப்பல்களில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 55 பேர்!

வெளிநாடுகளில் இருந்த 55 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

கட்டாரில் இருந்து QR 668 ரக விமானத்தின் ஊடாக இவர்கள் அனைவரும் இன்று அதிகாலை 1.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

வெளிநாட்டுக் கப்பல்களில் பணியாற்றும் 47 இலங்கையர்கள் மற்றும் இலங்கையில் அமைந்துள்ள உயர்ஸ்தானிகராலயங்களில் கடமையாற்றும் அதிகாரிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுமே குறித்த விமானத்தில் வருகைத் தந்ததாக கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததை தொடர்ந்து PCR பரிசோதனைகளின் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முகநூலில் நாம்