நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்தில் இராணுவ சிப்பாயின் சடலம் மீட்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வெள்ளவத்தையில் அமைந்துள்ள எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்தில் பாதுகாப்பு கடமையாக்க நியமிக்கப்பட்டிருந்த அதிகாரி ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இவ்வாறு கண்டெடுக்கப்பட்டவர் 22 வயதுடைய இராணுவ சிப்பாய் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர் T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்