நாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் ஊரடங்கு சட்டம் அமுல்!

நாடளாவிய ரீதியில் இன்றும் (04) நாளையும் (05) ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நேற்றிரவு 10 மணி முதல் நாளை மறுதினம் (06) அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த காலப்பகுதிக்குள் தனிமைப்படுத்தல் சட்டங்களை பின்பற்றுமாறு பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

ஊரங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு மதிப்பளித்து ஊரடங்கு சட்டத்தை பின்பற்றுமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

இதன்பிரகாரம் நாடளாவிய ரீதியில், வீதித்தடைகள் போடப்பட்டு நபர்களும், வாகனங்களும் பரிசோதனைக்குபட்படுத்தப்படவுள்ளனர்.

இது குறித்து அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் பொலிஸ் மா அதிபரினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியவசிய சேவைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் அத்தியவசிய தேவைகளை தவிர, வீடுகளிலிருந்து வௌியேற வேண்டாம் என பொலிஸார் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதனிடையே, இன்றைய தினம் அரசாங்க விடுமுறையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்