
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன்,நளினி, முருகன், ராபர்ட் பயஸ், சாந்தன், ரவிச்சந்திரன் மற்றும்ஜெயக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில்அடைக்கப்பட்டிருந்தனர்.இவர்களின் விடுதலை குறித்து முடிவெடுக்காமல் ஆளுநர் தாமதம் செய்தநிலையில் கடந்த மே மாதம் பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. இதேகாரணத்தை கொண்டு நீதிமன்றத்தை அணுகியிருந்த நளினி, முருகன் உள்ளிட்ட ஆறுபேரையும் அண்மையில் நீதிமன்றம் விடுதலை செய்தது.எவ்வாறு இருப்பினும் நளினியும், ரவிச்சந்திரனும் மாத்திரம் இந்தியாவைச்சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் தங்களது வீடுகளுக்கு செல்லஅனுமதிக்கப்பட்டனர்.எனினும் ராபர்ட் பயஸ், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் மற்றும்நளினியின் கணவர் முருகன் ஆகியோர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால்அவர்கள் திருச்சியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிறப்புமுகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் இலங்கை திரும்பும் வரை இங்குதான் தங்கி இருக்க வேண்டும் எனக்கூறப்படுகின்றது.