நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவம் குறித்து பிரதமர் விடுத்துள்ள பணிப்புரை!

நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவத்தின் போது அதிக எண்ணிக்கையான பக்தர்கள் கோவிலுக்குள் பிரவேசிக்க செய்வதற்கான பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்

பிரதமர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

கொவிட்19 பரவல் அச்சுறுத்தல் காரணமாக இந்த முறை நல்லூர் உற்சவத்தின்போது 50க்கும் குறைவான பக்தர்களை உட்பிரவேசிக்க அனுமதிக்க முடியும் என முன்னதாக தகவல் வெளியாகி இருந்தது

எனினும் குறித்த ஆலயத்தின் சிறப்பினை கருதி, உற்சவ காலத்தில் அதிக எண்ணிக்கையான பக்தர்களை ஆலயத்துக்குள் அனுமதிக்கும் அதே நேரம், சுகாதார அறிவுறுத்தல்களையும் பின்பற்றும் வகையிலான பொறிமுறை ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கோரியுள்ளார்.

இதேவேளை, கதிர்காமம் ஆலயத்தின் வருடாந்த உற்சவ காலத்தில் குறித்த புனித பூமியில் யாத்திரிகள் பிரவேசிப்பதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே தில்ருவன் ராஜபக்ஸ இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இவ்வாறு யாத்திரிகள் பிரவேசிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முகநூலில் நாம்