நல்லதண்ணியில் சிக்கிய கறுஞ்சிறுத்தை!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்‌ஷபான தோட்டத்தில் அழிந்து போனதாகக் கருதப்பட்ட அரிய வகை மிருகங்களில் ஒன்றான கறுஞ்சிறுத்தையொன்று சிக்கியுள்ளது.

வேட்டையாட விரிக்கப்பட்டிருந்த வலையிலேயே இந்த கறுஞ்சிறுத்தை இன்று சிக்கியுள்ளது.

மஸ்கெலியா பொலிஸாரும் நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளும் இணைந்து இதனை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

08 வயதான இக் கறுஞ்சிறுத்தை, உயிருடன் மீட்கப்பட்டு அதனை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகள் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

முகநூலில் நாம்