நண்பனை கொலைசெய்துவிட்டு பாம்பு கடித்து உயிரிழந்ததாக கூறி நாடகமாடிய நபர்

இந்தியாவில் உத்ர பிரதேச மாநிலத்தில் போபால் நகரில் தனது நண்பன் பாம்பு கடித்து உயிரிழந்ததாக உயிரிழந்த பாம்பை வைத்து நாடகமாடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவ தினமான இரவு சந்தீப் பாக்மரே என்ற நபர் தனது நண்பர் பஸ் சாரதியான நவல் சிங் என்பவருடன் மது அருந்தியுள்ளார்.

இந்நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் பாக்மரே நவல் சிங்கை கொலை செய்துள்ளார். அடுத்த நாள் காலை பொலிஸார் பாக்மரே வீட்டிற்குச் சென்று  சடலத்தை பார்த்த போது  அருகில் உயிரிழந்த பாம்பு ஒன்று இருந்துள்ளது.

பாக்மரே தனது நண்பர் பாம்பு தீண்டியே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். பிரேத பரிசோதனையில், உயிரிழந்த நவல் சிங்கின்  உடலில் விஷம் இல்லை அல்லது உடலில் பாம்பு கடித்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. நவல் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில் சந்தேக நபரான பாக்மரேவை விசாரணை செய்தனர். அப்போது தான் பொலிஸாரின் விசாரணையை திசை திருப்ப முயற்சித்ததாகவும், நவல் சிங்கின் வாய் மற்றும் மூக்கில் துணியால் சுற்றி மூச்சுத்திணறல் செய்து கொலை  செய்ததை ஒப்புக்கொண்டார்.

தற்போது, குற்றம் சாட்டப்பட்டவர் பாக்மரே பொலிஸில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் பாக்மரே தனியாக கொலை செய்தாரா அல்லது வேறு யாரையாவது செய்தாரா என பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்