
நடிகை ஸ்ருதிஹாசன் முதலில் ஹீரோயினாக நடிக்க வந்தபோது அவர் மீது அதிகம் எதிர்பார்ப்பு எழுந்தது. அதற்கு காரணம் அவர் கமல்ஹாசனின் மகள் என்பதால் தான். அவர் தொடர்ந்து படங்கள் நடித்தார் என்றாலும், தமிழ் சினிமாவில் அவரால் பெரிய வெற்றி கொடுக்கமுடியவில்லை.
அதனால் அவருக்கு வாய்ப்புகள் குறைந்து கொண்டிருந்தது. அவரது காதல் பிரேக்கப் உள்ளிட்ட பல விஷயங்களும் அதற்கு காரணம் எனலாம்.
இந்நிலையில் தற்போது ஸ்ருதி ஹாசன் மீண்டும் பிஸியாக மாறி இருக்கிறார். அவர் நடிப்பில் வரும் பொங்கலுக்கு இரண்டு படங்கள் ரிலீஸ் ஆக இருக்கிறது. தெலுங்கில் வால்டர் வீரய்யா மற்றும் வீர சிம்ஹா ரெட்டி அகிய படங்களில் அவர் நடித்து இருக்கிறார். பொங்கலுக்கு தான் நடித்த இரண்டு பெரிய ஹீரோ படங்கள் வெளியாவது தனக்கு ஸ்பெஷல் தான் என கூறி இருக்கும் ஸ்ருதி ஹாசன், அடுத்து ஜனவரியில் பிரபாஸின் சளார் படத்தின் ஷூட்டிங்கிலும் கலந்து கொள்ள இருக்கிறாராம்.