நடிகை வாணி போஜன் ஷேர் செய்த மொபைல் நம்பர், கோபமாகி போலிஸில் புகார், ரசிகர்கள் ஷாக்

சீரியல் மூலம் ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் கவர்ந்தவர் வாணி போஜன். இவர் தற்போது வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.

இந்நிலையில் இனி வெள்ளித்திரையில் இவரை பல படங்களில் பார்க்கலாம், ஏனெனில் ஓ மை கடவுளே படத்தில் இவருடைய கதாபாத்திரம் எல்லோரையும் கவர்ந்தது.

ஆனால், இந்த படத்தில் இவர் ஒரு மொபைல் நம்பர் சொல்வார், அது உண்மையாகவே ஒருவரின் நம்பர் தானாம்.

தினமும் அவருக்கு 50 பேர் போன் செய்து வாணியுடன் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருக்கின்றார்களாம்.

ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல், அவர் படக்குழுவினர்கள் மீது போலிஸில் புகார் கொடுத்துள்ளாராம்.

இந்த தகவல் கோலிவுட்டையும் மற்றும் படக்குழுவினர்களுக்கும் கண்டிப்பாக அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும்.

முகநூலில் நாம்