நடிகை பூனம் பாண்டே கைது!

கோவாவில் ஆபாசப் புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நடிகை பூனம் பாண்டே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அணி 2011 உலகக் கிண்ண வென்றபோது சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி கவனம் ஈர்த்தவர் பூனம் பாண்டே. 2013 இல் நாஷா படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். இதுவரை ஐந்து படங்களில் நடித்துள்ளார்.

பூனம் பாண்டே தனது காதலர் சாம் பாம்பேவை செப்டம்பர் 10 அன்று திருமணம் செய்தார். திருமணமான இரு வாரங்களில் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார் பூனம் பாண்டே. கணவர் சாம் பாம்பே தன்னைத் தாக்கியதாகவும் பாலியல் ரீதியாகத் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் அச்சுறுத்தியதாகவும் புகாரில் கூறினார். பூனம் பாண்டேவைத் தாக்கிய வழக்கில் கைதான கணவர் சாம் பாம்பேவுக்குப் பிறகு ஜாமீன் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இருவரும் சமரசமாகி இணைந்தார்கள்.

இந்நிலையில் கோவாவில் உள்ள கனகோனாவில் உள்ள சபோலி அணையில் ஆபாசப் படம் எடுத்ததாக பூனம் பாண்டே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சபோலி அணையில் ஆபாச போட்டோஷூட்டை அனுமதித்ததற்காக காவல் ஆய்வாளர் துக்காராம் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து துணை ஆட்சியரிடம் கோவாவைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் புகார் அளித்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக பூனம் பாண்டேவிடம் விசாரணை செய்த காவல்துறை இன்று அவரை கைது செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்